Homeசெய்திகள்சினிமாஉங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்..... பகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்த மாரி செல்வராஜ்!

உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்….. பகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்த மாரி செல்வராஜ்!

-

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பகத் பாசில்.
எல்லா படங்களிலும் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பினால் ஹீரோவையே மிஞ்சி விடுவார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ.

மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் தமிழில் இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் ரத்தினவேல் என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதில் பகத் பாஸில் சாதி வெறி கொண்ட வில்லனாக நடித்திருந்தாலும் இவரின் அசாத்தியமான நடிப்பு ரசிகர்கள் இவரை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் 41 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் பகத் பாஸிலுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“வணக்கம் பகத் சார்!!!
உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்”

மேலும் பகத் பாஸில் அடுத்ததாக தலைவர் 1980 ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ