Homeசெய்திகள்சினிமாமகளுக்கு திருமணம் உறுதி... முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபு

மகளுக்கு திருமணம் உறுதி… முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபு

-

- Advertisement -
தனது மகள் திருமணத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்துள்ளார் நடிகர் பிரபு. இந்தத் புகைப்படமும், செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் விஷால், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அண்மையில் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது
இவர் இதற்கு முன்பாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். மார்க் ஆண்டனி பட விழாவில் இந்த படத்திற்கு பிறகு ஆதிக்கிற்கு திருமணம் நடக்கும் என விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அவரது திருமணம் குறித்தான செய்தி அண்மையில் வெளியாகி பரவியது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியானது. கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகினார் ஐஸ்வர்யா, ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பதாகவும், இந்த ஜோடிக்கு இந்த மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் பிரபு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்து விடுத்துள்ள செய்தி வெளியாகி இருக்கிறது.

MUST READ