Homeசெய்திகள்சினிமாஅனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' கலக்கலான ட்ரெய்லர் வெளியானது!

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ கலக்கலான ட்ரெய்லர் வெளியானது!

-

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி. யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மகேஷ் பாபு இயக்கியுள்ளார். ரதன் இசையிலும் நீரவ் ஷா ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கலக்கலான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் மூலம் இப்படம் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அனுஷ்கா இதில் சமையல் கலைஞராக நடித்துள்ளார். நவீன் பொலி ஷெட்டி ஸ்டாண்ட் அப் காமெடி னாக நடித்துள்ளார். அனுஷ்காவின் கம்பேக் படமான இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

MUST READ