கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஜெயம் ரவியின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படுகிறது.
தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான பிரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் எம் மோகன், “தனி ஒருவன் கதையை நான் நடிகர் பிரபாஸிற்காக எழுதினேன். ஆனால் பிரபாஸ் அந்த சமயம் வேறு ஒரு படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் படத்தை இயக்கினேன்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பிரபாஸ் இந்த வாய்ப்பை தவறவிடாமல் இருந்திருந்தால் பாகுபலியை போன்று இந்த படமும் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமைந்திருக்கும் என்று பலரும் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.