நடிகர் மோகன்லால் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பரோஸ், வ்ருஷபா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தது இவர் தமிழில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், மோகன்லால் லூசிபர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது லூசிபர். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருவதுதான் லூசிபர் 2- எம்புரான். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை இரண்டாம் பாகத்தின் இதனை எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகமாக்கி உள்ளது. இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
Hyd —-> Tvm. #L2E #Empuraan @LycaProductions @aashirvadcine @Mohanlal pic.twitter.com/4SMWuYZ98H
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 7, 2024

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு அமெரிக்கா, துபாய், ஐதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்புகள் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.