Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிப்பில் உருவாகும் 'வ்ருஷபா'..... முக்கிய அப்டேட்!

மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘வ்ருஷபா’….. முக்கிய அப்டேட்!

-

மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நேரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் வ்ருஷபா எனும் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கம் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இதில் மோகன்லாலுடன் இணைந்து ரோஷன் மேகா, சிம்ரன் ஷனன்யா கபூர், சாரா கான், ஸ்ரீகாந்த் மேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒரு எப்டிக் ஆக்சன் என்டர்டைன்மென்ட் படமாக இந்த படம் தயாராகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் மிகுந்த பொருட்செலவில் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இந்த ஒரு மாத காலத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் எனவும் இப்படம் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ