spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹிப்ஹாப் ஆதியின் பிடி சார்... டிரைலர் குறித்த அப்டேட்...

ஹிப்ஹாப் ஆதியின் பிடி சார்… டிரைலர் குறித்த அப்டேட்…

-

- Advertisement -
ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் திரைப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் ஹிப்ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து, சினிமாவுக்கு வந்த ஹிப்ஹாப் ஆதி பல படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சுந்தர் சி இயக்கிய பெரும்பாலான அரண்மனை உள்பட பெரும்பாலான படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி பாடிய பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளன. இதைத் தொடர்ந்து மீசைய முறுக்கு படத்தில் நாயகனாக அறிமுகனார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இளைஞர்களின் விருப்ப நாயகனாவும் அவர் மாறினார்.

we-r-hiring
அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து இறுதியாக அவரது நடிப்பில் வீரன் திரைப்படம் வெளியானது. மரகத நாணயம் படத்தின் ஏஆர்கே சரவணன் இப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆதி நடித்துள்ள திரைப்படம் பிடி சார். கார்த்திக் வேனுகோபாலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை மறுநாள் மே 16-ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகிறது. மேலும், மே 23-ம் தேதி பிடி சார் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

MUST READ