- Advertisement -
டிசம்பர் 8 அன்று ஒரே நாளில் ரஜினி மற்றும் கமலின் திரைப்படங்கள் ரீ- ரிலீஸ்
17 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் ஒரே நாளில் இரு கதாநாயகர்களின் படம் திரைக்கு வருகிறது.2005 ஆம் ஆண்டில் ரஜினியின் சந்திரமுகி மற்றும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒரே நாளில் திரையிடப்பட்டன.


இதையடுத்து வரும் டிசம்பர் 8 ஆம் தேதியில் ரஜினியின் முத்து படமும் கமலின் ஆளவந்தான் படமும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக தெரியப்படுகிறது.

இந்த அறிவிப்பு ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. முத்து மற்றும் ஆளவந்தான் இரு படங்களும் ரசிகர் பட்டாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


