Homeசெய்திகள்சினிமாபிரபல பாலிவுட் நடிகையின் குடியிருப்பை வாங்கிய இளம் நடிகை

பிரபல பாலிவுட் நடிகையின் குடியிருப்பை வாங்கிய இளம் நடிகை

-

- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் வீட்டை, இளம் நடிகை வாங்கி இருக்கிறார்.

இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை மிருணாள் தாகூர்.. இதைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்து திரைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பாலிவுட்டில் கமிட்டாகி நடித்து வந்தார். சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமானவர் மிருணாள் தாகூர். துல்கர் சல்மான் மற்றும் மிருனாள் தாகூர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்‘ திரைப்படம் பான் இந்தியா அளவில் மெஹா ஹிட் ஆனது.

நடிகை மிருனாள் தாகூர் சீதா மகாலட்சுமியாகவும் இளவரசி நூர்ஜஹான் ஆகவும் ஒரே நேரத்தில் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றார். இதைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் ஹாய் நான்னா படத்தில் நானிக்குஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகிநல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பேமிலி ஸ்டார் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூரின் குடும்பத்தினர், மும்பை மேற்கு அந்தேரியில் உள்ள இரண்டு குடியிருப்புகளை வாங்கி இருக்கிறார். 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த குடியிருப்புகள், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு சொந்தமாகும்.

MUST READ