தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு தரமான இசையை அமைத்து பிரபலமான இசையமைப்பாளர் தான் சாம் சி எஸ். 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி எனும் 3D திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஷாம் சி எஸ். அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களுக்கு இசையமைத்தார். இருப்பினும் இவர் இசையமைத்த விக்ரம் வேதா படம் இவருக்கு நற்பெயரைப் பெற்று தந்தது. கைதி படத்தில் இவருடைய இசை மிகவும் பேசப்பட்டது. இவர் தற்போது ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிவிட்டவர் . பல பெரிய படங்களுக்கும் சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில்தான் இவரின் வீட்டில் ஒரு துக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருடைய தாயார் மரணமடைந்துள்ளார். இயற்கை எய்தி உள்ள அவரின் தாயார் சேலத் மேரி அவர்களின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான தேனி மாவட்டம் நாராயண தேவன் பட்டியில் நடந்துள்ளது. தாயை இழந்து வாடும் சாம் சி எஸ் க்கு ரசிகர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -


