மாலை 6.30 மணிக்கு ‘லியோ’ முதல் பாடல்
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜயுடன் சஞ்சய்தத், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் விஜய் கூட்டணியில் இப்படம் வெளிவர இருப்பதால் ரசிகர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே அனைத்து சினிமா ரசிகர்களும் படத்தில் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கான ப்ரோமோவையும் படக்குழு 2 தினங்களுக்கு முன் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிக்க செய்தது.

இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், படத்தின் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


