குபேரா படத்தில் நாகர்ஜூனா முதல் தோற்றம் ரிலீஸ்
- Advertisement -
குபேரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நாகர்ஜூனாவின் முதல் தோற்றம் வீடியோவுடன் வெளியாகி உள்ளது.

தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற தலைப்பில் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். மீண்டும் இந்தியில், ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிட் அடித்தது. தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தனுஷ் நடிக்கும் 51-வது படமாகும். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வெளியாகிறது. கடந்த 2021-ம் ஆண்டு படம் அறிவிக்கப்பட்டு அண்மையில் தான் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது. படத்தில் தனுஷின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது, குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகர்ஜூனாவின் முதல் தோற்றமும் வீடியோவுடன் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.