நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது.
வெங்கட் பிரபு தற்போது தளபதி 68 படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் தயாரிக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் குறித்து ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
இந்த படத்தை மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் இயக்கி நடிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து விடுதலை படத்தில் நடித்திருந்த பவானி ஸ்ரீ , ஆர்.ஜே விஜய், குக் வித் கோமாளி பாலா, இர்ஃபான், குமாரவேல், லீலா, மோனிகா, வினோத் உள்ளிட்ட 13 நடிகர்கள் நடிக்கின்றனர். ஏ எச் காசிப் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். நண்பர்களைப் பற்றிய கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
சமீபத்தில் இந்த படக்ழுவினர் சுப்பிரமணியபுரம், பாய்ஸ், பஞ்சதந்திரம், என்றென்றும் புன்னகை, சென்னை 600028 உள்ளிட்ட படங்களின் கதாபாத்திரத்தை ரீகிரியேட் செய்து நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக போஸ்டர்களை வெளியிட்டு கவனம் பெற்றனர். மேலும் இதன் ப்ரோடுக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரின் இடதுபுறம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் வலது புறம் சிங்கப்பூரும் காட்டப்பட்டுள்ளது.அதனால் சென்னை மற்றும் சிங்கப்பூரில் வாழும் நண்பர்களின் கதையை கூறும் விதமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொருட்களை வைத்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் திறமைகளாகவும் இருக்கலாம் அல்லது ஹாபியாக கூட இருக்கலாம். இதனை பார்க்கும்போது ஜாலியான நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிச்சயமாக இது இளைஞர்களை கவரும் வண்ணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.