Homeசெய்திகள்சினிமா'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்திற்காக களமிறங்கும் ஏ ஆர் ரகுமான்...... முக்கிய அறிவிப்பு!

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்காக களமிறங்கும் ஏ ஆர் ரகுமான்…… முக்கிய அறிவிப்பு!

-

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு, தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் மாநாடு கஸ்டடி உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு தளபதி 68 படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்னும் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்த படத்தை மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் இயக்கி நடிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து விடுதலை படத்தில் நடித்திருந்த பவானி ஸ்ரீ , ஆர்.ஜே விஜய், குக் வித் கோமாளி பாலா, இர்ஃபான், குமாரவேல், லீலா, மோனிகா, வினோத் உள்ளிட்ட 13 நடிகர்கள் நடிக்கின்றனர். ஏ எச் காசிப் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜாலியான நண்பர்களையும் அவர்களின் நட்புகளையும் பற்றி பேசக்கூடிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.

நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பர்ஸ்ட் லுக்கை நடிகர் சிம்பு வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் “நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்திற்காக இசை புயல் ஏ ஆர் ரகுமான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ