- Advertisement -
நானி நடித்த ஜெர்சி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக, படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
தெலுங்கில் ஸ்டார் இளம் நாயகனாக வலம் வருபவர் நானி. தமிழில் சிவகார்த்திகேயன் என்றால் தெலுங்கில் நானி என்று கொண்டாடும் ரசிகர்கள் பலர். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் நானி. ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டும் உச்ச நாயகன் நானி. தமிழில் நான் ஈ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் நடித்தும் அடுத்தடுத்து படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
நானி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹாய் நான்னா. இப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனிடையே, நானி நடித்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெர்சி. இத்திரைப்படத்தை கௌதம் தின்னானூரி இயக்கி இருந்தார். படத்தில் நானி நாயகனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தாரா நிறுவனம் படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் வசூல் ரீதியாக மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் படம் வரவேற்பை பெற்றது.
On the occasion of Nani's #JERSEY 5years anniversary
Special Shows on April 20th….. pic.twitter.com/rBPb5lyrHh
— Filmy Bowl (@FilmyBowl) April 13, 2024