கங்குவா திரைப்படம் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படம் ஒரு வரலாற்று சரித்திர படமாக சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. 3D அனிமேஷனில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. படமானது இரு வேறு காலகட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதாணி, கோவை சரளா, யோகி பாபு, நட்டி நடராஜன், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து நட்டி நடராஜன், ” கங்குவா படத்தில் வித்தியாசமான அனுபவத்தை காண்பீர்கள். ஒவ்வொரு காலகட்டங்களையும் படமாக்குவதில் சில சிரமங்கள் இருந்தன. படமானது சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த படத்தில் நான் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி கங்குவார் திரைப்படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துள்ளார்.


