spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா30 வருடத்திற்கு முன் இளையராஜா என்ற ஒருத்தர் வராம போயிருந்தா.... நட்டி நடராஜ் பேச்சு!

30 வருடத்திற்கு முன் இளையராஜா என்ற ஒருத்தர் வராம போயிருந்தா…. நட்டி நடராஜ் பேச்சு!

-

- Advertisement -

இசைஞானி இளையராஜா குறித்து நடிகர் நட்டி நடராஜ் பேசியுள்ளார்.30 வருடத்திற்கு முன் இளையராஜா என்ற ஒருத்தர் வராம போயிருந்தா.... நட்டி நடராஜ் பேச்சு!

நடிகர் நட்டி நடராஜ் தமிழ் சினிமாவில் மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் இவர் பல படங்களில் ஹீரோவாகவும், குணசித்திர இடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்தான் நடிப்பில் நிறம் மாறும் உலகில் எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கிடையில் இவர் சூர்யா 45, இதயம் முரளி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நட்டி நடராஜ், இசைஞானி இளையராஜா குறித்து பேசி உள்ளார். அதன்படி நட்டி நடராஜிடம், இளையராஜா லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.30 வருடத்திற்கு முன் இளையராஜா என்ற ஒருத்தர் வராம போயிருந்தா.... நட்டி நடராஜ் பேச்சு! அதற்கு நட்டி நட்ராஜ், “மிகவும் சந்தோஷமான விஷயம். 30 வருடங்களுக்கு முன் இளையராஜா என்ற ஒருத்தர் வராமல் இருந்திருந்தால் இங்கு பல பேர் பைத்தியக்காரங்களாக மாறியிருப்பார்கள். அவர் மேன்மேலும் பல சிம்பொனிகளை அரங்கேற்ற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும் அவரிடம் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். நல்லது பண்ணா நல்ல விஷயம் தான்” என்று கூறியுள்ளார்.

MUST READ