Homeசெய்திகள்சினிமாதிருமண நாளில் இரட்டை குழந்தைகளை கைகளில் ஏந்தி புகைப்படம் வெளியிட்டுள்ள நயன்தாரா!

திருமண நாளில் இரட்டை குழந்தைகளை கைகளில் ஏந்தி புகைப்படம் வெளியிட்டுள்ள நயன்தாரா!

-

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இரட்டை குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு நயன்தாரா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிக்க தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து ஏழு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
ரஜினிகாந்த், ஷாருக் கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று விக்னேஷ் சிவனையும் நயன்தாராவையும் வாழ்த்தினர்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணத்திற்கு பின் 4 மாதங்கள் கழித்து வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். இரு குழந்தைகளுக்கும் உயிர் ருத்ரோனில் N சிவன் மற்றும் உலக் தெய்வீக் N சிவன் என்று பெயரிட்டுள்ளனர்.

இருவரும் படங்களில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளையும் மிகவும் கவனமாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியின் திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இவர்கள் இருவரும் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நயன்தாரா குழந்தைகள் உடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து “நேற்று தான் நம் திருமணம் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் திடீரென நம் நண்பர்கள் ஹாப்பி வெட்டிங் அனிவெர்சரி என்கிறார்கள். லவ் யூ தங்கமே இருவரும் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் நிறைய சாதிக்க வேண்டும். நம் திருமணத்தின் இரண்டாவது ஆண்டை கடவுளின் ஆசீர்வாதங்களுடன் தொடங்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ