யாஷின் டாக்சிக் திரைப்படம்…. படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா…
- Advertisement -
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகர் யாஷ். குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை நடிகர் யாஷூ உண்டு. கேஜிஎஃப் 1 மற்றும் 2 இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதில் இரண்டாம் உலகம் முழுவதும் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இதுவரை கன்னட சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்தது. இதைத் தொடர்ந்து யாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இத்திரைப்படம கோவாவில் போதைப் பொருள் நடத்தும் கும்பலை மையப்படுத்தி உருவாக உள்ளது. ஆக்ஷன் நிறைந்த ஒரு படமாக இது தயாராகி வருகிறது. டாக்சிக் என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் யாஷூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிப்பதாகவும், அக்காவாக நயன்தாரா நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 50 நாட்களும், இங்கிலாந்தில் 150 நாட்களும் என மொத்தம் 200 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.