spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர்!

குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர்!

-

- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் இயக்குனர் விக்னேஷ் ஓணம் தனது அடுத்த படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இருவரும் தனது இரட்டை குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் அதைத் தொடர்ந்து நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இரு குழந்தைகளுக்கும் உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்ற பெயரிட்டுள்ளனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் தனது குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி அவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ஓணம் திருநாளை முன்னிட்டு இன்று தன் மகன்களோடு பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தன் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இதுவரை தங்களின் குழந்தைகளின் முகத்தை வெளி காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ