Homeசெய்திகள்சினிமாநிவின்பாலி - நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்... படப்பிடிப்பு தொடக்கம்...

நிவின்பாலி – நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்… படப்பிடிப்பு தொடக்கம்…

-

- Advertisement -
கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் முதல் படத்திலேயே உச்சம் தொட்டவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நயன், முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்க அவர்முனைப்பு காட்டி வருகிறார். அதே சமயம் தமிழிலும் பல திரைப்படங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சினிமா, குடும்பம், தொழில் என மாறி மாறி சூப்பர் ஸ்டாராக அனைத்து துறைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் கனெக்ட் மற்றும் அன்னபூரணி என நயன்தாரா அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியைச் சந்தித்தன. இருப்பினும், டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய இரண்டு படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து மலையாளப் பக்கம் திரும்பியுள்ள நயன்தாரா, நிவின்பாலி நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். டியர் ஸ்டூடண்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜார்ஜ் பிலிப் மற்றும் சந்தீப் இணைந்து இயக்குகின்றனர்.

பள்ளியில் நடக்கும் காதல் கதைக்களத்தை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இவர்களும் இருவரும்இதற்கு முன்பாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்

MUST READ