spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"சோசியல் மீடியா பக்கம் கொஞ்ச நாள் வரமாட்டேன்"… ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நஸ்ரியா 

“சோசியல் மீடியா பக்கம் கொஞ்ச நாள் வரமாட்டேன்”… ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நஸ்ரியா 

-

- Advertisement -

நடிகை நஸ்ரியா சமூக வலைத்தளங்கில் இருந்து சில காலத்திற்கு ஓய்வு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரபல நடிகை நஸ்ரியா தனது கியூட் எக்ஸ்பிரெஷன் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அதையடுத்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் நானி உடன் அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

we-r-hiring

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு அப்டேட் கொடுத்து வந்தார். இந்நிலையில் திடீரென சமூக வலைத்தளங்கில் இருந்து சில காலத்திற்கு ஓய்வு எடுக்க இருப்பதாக நஸ்ரியா அறிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்துள்ளனர். “அனைத்து சமூக ஊடகங்களிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்… நேரம் வந்துவிட்டது… உங்கள் காதல் மற்றும் செய்திகள் அனைத்தையும் இங்கே இழக்க நேரிடும்… விரைவில் வருவேன் என நான் உறுதியளிக்கிறேன்.” என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த முடிவுக்கு காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது நஸ்ரியா, மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் உடன் ஒரு புதிய ரொமான்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

MUST READ