spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுட் பேட் அக்லி படத்தில் இணையும் மற்றொரு நாயகி... பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை...

குட் பேட் அக்லி படத்தில் இணையும் மற்றொரு நாயகி… பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை…

-

- Advertisement -
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் மற்றொரு புதிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி என்ற வெற்றிப் படத்தை இயக்கி ஆதிக் ரவிச்சந்திரன் தான் இத்திரைப்படத்தை இயக்குகிறார். தெலுங்கில் டாப் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் முடிவு பெற்றது. அத்துடன், குட் பேட் அக்லி படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வௌியான நிலையில், தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..

MUST READ