Homeசெய்திகள்சினிமாஎன்னமா செதுக்கி வச்சிருக்காரு... தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!

என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!

-

- Advertisement -

அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் மாடர்ன் லவ் சீரிஸ் உலகம் முழுக்க பிரபலமானது. இந்நிலையில் தமிழிலும் மாடர்ன் லவ் சீரிஸ் வரவிருக்கிறது. தமிழில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய சுந்தர் மற்றும் தியாகராஜன் குமரராஜா ஆகியோர் இணைந்து புதிய அந்தாலஜி படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம் தியாகராஜன் குமாரராஜா தலைமையின் கீழ் உருவாகி இருக்கிறது.

இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த அந்த அந்தாலஜி படத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் இசையமைக்க இருக்கின்றனர்.

இந்தப் படம் மே 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் 6 பகுதிகளில் நினைவோ ஒரு பறவை பகுதியை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். இந்தப் பகுதிக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வாமிகா மற்றும் பீபி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நினைவோ ஓர் பறவை பகுதியைப் பார்த்த நெல்சன் தியாகராஜன் குமாரராஜாவைப் பாராட்டியுள்ளார்.

“மாடர்ன் லவ் சென்னையிலிருந்து தியாகராஜன்குமாரராஜா சாரின் நினைவோ ஓர் பறவை பகுதியைப் பார்க்க நேர்ந்தது, ஒரு காதல் கதையை அணுகுவதற்கான ஒரு சுருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான வழி. மேஜிக் காட்சிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் புத்திசாலித்தனமாக பணியாற்றியுள்ளனர். நடிகர்களின் சிறந்த நடிப்புடன் கதை மிகவும் நேர்த்தியாக சேர்க்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பாருங்கள் தவறவிடாதீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ