Homeசெய்திகள்சினிமாவெட்னஸ்டே சீசன்-2 படப்பிடிப்பு தீவிரம்... விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ்..

வெட்னஸ்டே சீசன்-2 படப்பிடிப்பு தீவிரம்… விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ்..

-

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெட்னஸ்டே சீரிஸின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் ரசிகர்கள் தமிழ் மொழிப் படங்களை தாண்டி அனைத்து மொழிப் படங்களையும் காண ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தென்னிந்தி மொழிகள் மட்டுமன்றி இந்தி, ஆங்கிலம், கொரிய மொழிப் படங்களும் இந்தியாவில் அதிக கவனம் பெறுகின்றன. அந்த வகையில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும், ஹாலிவுட்டில் உருவாகும் இணைய தொடர்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உண்டு. பிரண்ட்ஸ், ஸ்ட்ரேஞ்சர் திங்கஸ் இந்த வரிசையில் பல தொடர்கள் இந்தியாவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அதில் ஒன்றுதான் வெட்னஸ்டே சீரிஸ்.

இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆல்ஃப்ரெட் கோப் மற்றும் மைல்ஸ் மில்லர் ஆகியோர் இந்த தொடரை தயாரித்தனர். ஜென்னா ஓர்கேடாவின் நடிப்பில் இந்த தொடர் வெளியானது. ஹாரர் மற்றும் நகைச்சுவை கலந்த கதையம்சத்தில் வெளியான வெட்னஸ்டே தொடர், இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தது. 8 எபிசோட் கொண்ட இந்த தொடர், ஆடம்ஸ் பேமிலி என்ற ஒரு குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது ஆகும்.

இந்த தொடர் வெளியான 2022-ம் ஆண்டில், நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இணைய தொடர் என்ற சாதனையை வெட்னஸ்டே சீரிஸ் பெற்றது. இந்நிலையில், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அயர்லாந்தில் இந்த சீசனின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

MUST READ