spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்

வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்

-

- Advertisement -
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் உச்ச இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிட்லர் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, சரண்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

we-r-hiring
இதற்கிடையில் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, பிரியா அப்துல்லா, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தாய் சரவணன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், வள்ளி மயில் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ