spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாடர்ன் லவ்... தியாகராஜன் குமாரராஜா தலைமையில் புதிய வெப் சீரிஸ்!

மாடர்ன் லவ்… தியாகராஜன் குமாரராஜா தலைமையில் புதிய வெப் சீரிஸ்!

-

- Advertisement -

அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் மாடர்ன் லவ் சீரிஸ் உலகம் முழுக்க பிரபலமானது. இந்த அந்தாலஜி படம் இந்தியாவிற்கு ஏற்ற வகையில் அந்தந்த  அந்தந்த வட்டார மொழிகளில் மீண்டும் உருவாக்கப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தமிழிலும் மாடர்ன் லவ் சீரிஸ் வரவிருக்கிறது. தமிழில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய சுந்தர் மற்றும் தியாகராஜன் குமரராஜா ஆகியோர் இணைந்து புதிய அந்தாலஜி படத்தை இயக்குகின்றனர். இந்த படம் தியாகராஜன் குமாரராஜா தலைமையின் கீழ் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

we-r-hiring

இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த அந்த அந்தாலஜி படத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் இசையமைக்க இருக்கின்றனர்.

இந்தப் படம் மே 18ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருக்கிறது.

லாலாகுண்டா பொம்மைகள் ராஜுமுருகன் இயக்கத்தில் ஷான் ரோல்டன்  இசையில் உருவாகியுள்ளது. ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்

இமைகள் – பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா, அசோக் செல்வன், மற்றும் டீ.ஜே பானு ஆகியோர் நடித்துள்ளனர்

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி – கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ளது. ரித்து வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்

மார்கழி – அக்ஷய் சுந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ளது. சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்

பறவை கூட்டில் வாழும் மான்கள் – பாரதிராஜா இயக்கத்தில்,  இளையராஜா இசையில் உருவாகியுள்ளது. கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்

நினைவோ ஒரு பறவை – தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ளது. வாமிகா மற்றும் பீபி ஆகியோர் நடித்துள்ளனர்.

MUST READ