- Advertisement -
தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற படத்தில் நடித்தார்.
தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் ‘அந்தாரிக்ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் நடைபெற்றது. இத்தாலியில் டசுக்கனி நகரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் இருவரின் திருமணமும் நடைபெற்றது. இதில், பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராம் சரண், பவண் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இருவரின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Newly weds #VarunTej and #LavanyaTripathi spotted at #Dehradun airport as they arrive there for their second reception. pic.twitter.com/mpOO8WXSmn
— Box Office Income (@BOIncome) November 15, 2023