spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலால் சலாம் ஷூட்டிங்கை நிறைவு செய்த நிரோஷா.... வெளியான புதிய தகவல்!

லால் சலாம் ஷூட்டிங்கை நிறைவு செய்த நிரோஷா…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகை நிரோஷா லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் செந்தில், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைகளத்தில் உருவாகி வருகிறது அதனால் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் இப்படத்தில் நடிக்கிறார்.

we-r-hiring

மேலும் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்கிறார். 1988 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நிரோஷா. இவர் ராம்கி, கமல், கார்த்தி, பிரபு உள்ளிட்டருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு ஆகும். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது சமீபத்தில் முதற்கட்ட படைப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.சமீபத்தில் ரஜினி தனது படப்பிடிப்பை நிறைவு செய்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிரோஷாவும் நிறைவு செய்ததாக லால் சலாம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாஆகி வருகிறது.மேலும் லால் சலாம் திரைப்படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ