spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்த்க்கு ஜோடியாகும் நிரோஷா..... எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிகாந்த்க்கு ஜோடியாகும் நிரோஷா….. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
அதேசமயம் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்‘ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் செந்தில் தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

we-r-hiring

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் இவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. ஆனால் தற்போது அது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அது என்னவென்றால், தமிழ் சினிமாவில் 1988 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த நிரோஷா ரஜினிகாந்த்க்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை நிரோஷா ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறையாகும். இந்த படத்தில் நிரோஷா ரஜினிகாந்த் மனைவியாக நடிக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ