- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
நிதின் தற்போது தனது 32 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வக்கான்தம் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ஸ்ரீஷத் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி இப்படத்திற்கு எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் (EXTRA ordinary man) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.