spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகைக்கு வீடு வாங்கிய அமைச்சர் ... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை...

பிரபல நடிகைக்கு வீடு வாங்கிய அமைச்சர் … சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை…

-

- Advertisement -
பிரபல நடிகைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

 

we-r-hiring
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர், தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக எம்மனசு தங்கம், ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அலவைக்குந்தபுரமுலோ திரைப்படத்தில் நிவேதா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அண்மையில், யூ டியூபர் ஒருவர் நிவேதா பெத்துராஜ் தொடர்பாக அவதூறு பரப்பினார். அதில், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நிவேதா பெத்துராஜூக்கு துபாயில் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் புதிய வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், அதுமட்டுமன்றி அவருக்கு காரையும் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அவர் மீது அரசியல் ரீதியிலான கடும் விமர்சனங்களை தொடர்ந்து வைத்து கொண்டே இருந்தனர்.

 

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த நிவேதா பெத்துராஜ், இது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களாக பரவும் பொய் செய்திகளால் நானும், என் குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோகித்து பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். நான் நடித்த படங்கள் எல்லாம், எனக்கு தேடி வந்த வாய்ப்புகள், நான் யாரையும் தேடிச் செல்லவில்லை. இதுபோன்ற அவதூறு பரப்புவோர் மீது சட்டரீதியாக இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிவேதா பெத்துராஜ் எச்சரித்தார்.

MUST READ