spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹெய்ஸ்ட் திரில்லர் படத்தில் நிவின் பாலி..... டைட்டில் குறித்த அப்டேட்!

ஹெய்ஸ்ட் திரில்லர் படத்தில் நிவின் பாலி….. டைட்டில் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

நிவின் பாலி மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் பல்வேறு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் நேரம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதைத்தொடர்ந்து தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக நிவின் பாலி நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான படவெட்டு, துறைமுகம் உள்ளிட்ட திரைப்படங்கள் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ஹனீப் அடேனி இயக்கத்தில் நிவின் பாலி தனது 42 வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.கடந்த ஆண்டு வெளியான மைக்கேல் திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
‘NP42’ படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து கணபதி, ஜாஃபர் இடுக்கி, வினய் போர்ட், பாலு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு மதன் முகுந்தன் இசை அமைத்துள்ளார்.
ஹெயிஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் முழுமையாக நிறைவடைந்தது.

we-r-hiring

தற்போது ‘NP42’ படத்தின் தலைப்பு (ஜூலை 8) இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ