Homeசெய்திகள்சினிமாஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகியுள்ள 'நூடுல்ஸ்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் ஹரிஷ் உத்தமன் தற்போது ஹீரோவாக நூடுல்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஹரிஷ் உத்தமனுடன் இணைந்து ஷீலா ராஜ்குமார், தட்சிணாமூர்த்தி, ஆலியா, வசந்த், நகுணா, ஹரிதா, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை துணிவு, கர்ணன், அயோத்தி, மாமன்னன், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மதன் இயக்கியுள்ளார்.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராபர்ட் சற்குணம் இந்த படத்திற்கு இசையமைக்க வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ