- Advertisement -
ஹரிஷ் உத்தமன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நூடுல்ஸ். இதனை சுரேஷ் காமாட்சியின் v ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனமும் ரோலிங் சவுண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை கர்ணன் அயோத்தி மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்த மதன் இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் உத்தமனுக்கு ஜோடியாக மண்டேலா பட நாயகி ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் மதன் தட்சிணாமூர்த்தி, ஆலியா, வசந்த், நகுணா, ஹரிதா, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடைய கவனம் பெற்றுள்ளது.