Homeசெய்திகள்சினிமா'மாமன்' படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘மாமன்’ படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.'மாமன்' படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் சூரி. அதைத்தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதேசமயம் சூரி, கடந்த 2023ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார் . இந்த படத்தின் வெற்றி நடிகர் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தர தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது விலங்கு என்ற வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூரி. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக செய்திகள் வெளியானது. அதன்படி தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை விடுதலை 1, 2 ஆகிய படங்களை இயக்கிய ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் இயக்குனர் மதிமாறனும் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ