Homeசெய்திகள்சினிமாதியேட்டரில் அனுமனுக்காக ஒரு சீட் எதற்கு… விளக்கம் அளித்துள்ள ஆதிபுருஷ் இயக்குனர்!

தியேட்டரில் அனுமனுக்காக ஒரு சீட் எதற்கு… விளக்கம் அளித்துள்ள ஆதிபுருஷ் இயக்குனர்!

-

அனுமனுக்கு சீட் ஒதுக்கிய விவகாரம் பேசுபொருள் ஆனதை அடுத்து ஆதிபுருஷ் படத்தின் இயக்குனர் ஓம் ரவுத் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்‘ எனும் வரலாற்று சரித்திர படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் பிரபாஸுடன் கீர்த்தி சனோன், சைஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஓம்ராவத் இயக்கியுள்ளார். இந்தப் படம் டி சீரிஸ் நிறுவனம் மற்றும் நேற்று ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி 2D மற்றும் 3D வடிவங்களில் உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் எதற்கு இந்த வேண்டாத வேலை?இதனால் என்ன பயன்? என்ற வகையில் பல்வேறு விதமான விமர்சனங்கள் பரவி வந்தன.

தற்போது அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ஓம் ராவத் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில்,

“சிறுவயதிலிருந்தே எங்கு இராமாயண நாடகம் நடந்தாலும் அங்கு அனுமன் வந்து பங்கேற்பார் என்று எனது அம்மா கூறியிருக்கிறார். அதனால் தான் தற்போது இராமாயணக் காவியத்தை தழுவி நான் இயக்கி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டேன்” என்று கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ