- Advertisement -
ஒசூரில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில், இயக்குநர் பா.ரஞ்சித் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளவர் இயக்குநர் பா ரஞ்சித். இவர் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி உள்ளார். 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல, நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது பா ரஞ்சித் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசைக் கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயலில் தொடங்கியுள்ளது. வரும் 30-ம் தேதி வரை ஓசூல் மற்றும் சென்னை நகரங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Thank you Hosur for yours Massive Response ✨🎊🥁#margazhiyilmakkalisai pic.twitter.com/MKZm36zlmj
— Margazhiyil Makkalisai (@makkalisai) December 25, 2023