Homeசெய்திகள்சினிமாகிச்சா சுதீப்பின் 'மேக்ஸ்' படத்தை பாராட்டிய பார்த்திபன்!

கிச்சா சுதீப்பின் ‘மேக்ஸ்’ படத்தை பாராட்டிய பார்த்திபன்!

-

- Advertisement -

பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கிச்சா சுதீப்பின் மேக்ஸ் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.கிச்சா சுதீப்பின் 'மேக்ஸ்' படத்தை பாராட்டிய பார்த்திபன்!

கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வந்த படம் மேக்ஸ். அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படத்தினை விஜய் கார்த்திகேயா இயக்கியிருந்தார். பி கிரியேஷன்ஸ் நிறுவனமும் கிச்சா கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தது. சேகர் சந்திரா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க அஜினிஸ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் மேக்ஸ் திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” Max- imum ஆக்ஷன் உள்ள ஆனால் மிகவும் தத்ரூபமாக கதையோடு ஒட்டிய திரைக்கதையோடு ஒட்டிய அதிரடி ஆக்சன் ஒவ்வொன்றும். என்னிடம் பணிபுரிந்த விஜய வானன் இன்று விஜய கார்த்திகேயாவாக மாறி அற்புதமாக இயக்கியிருக்கும் படம் என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் இந்த படத்தை பார்த்தேன். இறுதிவரை சிறிய தொய்வும் இல்லாமல் மனுஷன் மிரட்டி இருக்கிறார்.

நண்பர் தாணுவுக்கு முதலில் வாழ்த்து சொல்லி பின் நாயகன் சுதீப் அவர்களிடமும் பேசினேன். படம் பிடித்து விட்டால் கூடவே பைத்தியமும் பிடித்து விடும் எனக்கு. இரவெல்லாம் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டியே விடிந்து விடும். சுதீப் பைட் செய்யும்போது மாஸ்டர் சொல்லிக் கொடுத்து அடிப்பது போலவே இல்லை. அப்படி ஒரு பாடி லாங்குவேஜில் ஆக்ஷனிலும் நடிப்பிலும் பின்னி பெடலெடுக்கிறார். அவர் செய்த ஃபைட்டை விட கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஃபைட் செய்து வரும் 25 நிஜ ஹாப்பியாக இயக்குனர் கொண்டாடுவதும் இனி பலரும் அவரை கொண்டாடுவதும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ