வினோதய சித்தம் தெலுங்கு ரீமேக் படத்தின் மாஸான போஸ்டர் உடன் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் வெளியான வினோதய சித்தம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்தப் படத்தை பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் சமுத்திரக்கனி.
தெலுங்கில் இந்தப் படம் ‘ப்ரோ’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண் என்ற பெரிய ஸ்டார் நடிக்க இருப்பதால் கதை மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வெளியாகியுள்ள போஸ்டரில் பவண் கல்யாண், சாய் தரம் தேஜ்-ம் மாஸாக காணப்படுகின்றனர். இந்தப் படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- Advertisement -