spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா''சமுத்திரக்கனி மனித உறவுகளை நம்புபவர்‌"'... நடிகர் பவன் கல்யாண் நெகிழ்ச்சி!

”சமுத்திரக்கனி மனித உறவுகளை நம்புபவர்‌”‘… நடிகர் பவன் கல்யாண் நெகிழ்ச்சி!

-

- Advertisement -

தெலுங்கு ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் சமுத்திரகனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் வெளியான வினோதய சித்தம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்தப் படத்தை பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் சமுத்திரக்கனி.

we-r-hiring

இந்நிலையில் நேற்று சமுத்திரக்கனி பிறந்தநாளை அடுத்து பவன் கல்யாண் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


திரு.சமுத்திரக்கனி அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள்‌ வாழ்த்துக்கள்‌

மிக திறமையான இயக்குனர்‌, எழுத்தாளர்‌, நடிகர்‌ இரு.சமுத்திரக்கனி
அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள்‌ நல்வாழ்த்துக்கள்‌. அன்பான இரு.
சமுத்திரக்கனி மனித உறவுகளை நம்புபவர்‌. அதனால்தான்‌ அவரது
படங்களில்‌ அதன்‌ கருத்துக்கள்‌ காணப்படுதின்றன. சாதியற்ற சமுதாயத்தை
விரும்புபவர்‌. தமிழ்‌ மற்றும்‌ தெலுங்கு இரையுலஜில்‌ நடிகராகவும்‌
இயக்குனராகவும்‌ தனக்கென தனி அங்‌ககாரம்‌ பெற்றவர்‌. நடிகராக தேசிய
அளவில்‌ விருது பெற்றார்‌. என்னுடைய ‘பீம்லா நாயக்‌’ படத்தில்‌ அவர்‌ முக்கிய
வேடத்தில்‌ நடித்தார்‌. தற்போது இவரது இயக்கத்தில்‌ ஒரு படம்‌ உருவாதி
வருகிறது. வரும்‌ நாட்களில்‌ மேலும்‌ பல வெற்றிகளை பெற மனதார
வாழ்த்துகிறேன்‌. மூகாம்பிகை தேவியின்‌ பக்தரான திரு. சமுத்திரக்கனிக்கு
அந்த ஜகத்காரணி அருள்‌ எப்போதும்‌ கிடைக்க பிரார்த்திக்கிறேன்‌.

பவன்‌ கல்யாண்‌” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி

அன்புச்‌ சகோதரா…

உங்கள்‌ பேரன்பிற்கு நன்றி…

உங்களோடு பணிபுரிந்த ஒவ்வொரு நொடியும்‌ நீங்கள்‌ எனக்கு;
ஆச்சரியம்‌… வியப்பு… மனிதம்‌…

பல விசயங்கள்‌ கற்றுக்‌ கொண்டேன்‌…

மனித சமூகத்தின்‌ மீதான உங்கள்‌ பார்வை…

நீங்கள்‌ ஏற்படுத்த நினைக்கும்‌ மாற்றம்‌…

என்னை பிரமிக்க வைத்தது…

மாற்றம்‌ என்பது மட்டுமே மாறாதது…

இந்த தேசத்தில்‌ மாபெரும்‌ மாற்றம்‌ உங்களால்‌ நிகழ…
எல்லாம்‌ வல்ல இறைவன்‌ அருள்புரிய வேண்டுகிறேன்‌…” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ