பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
பேரன்பும் பெருங்கோபமும் என்ற திரைப்படத்தை இயக்குனர் பாலு மகேந்திராவின் சிஷ்யன் சிவப்பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அறிமுக நடிகர் விஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக செங்கலம் வெப் தொடரில் நாச்சியாராக நடித்திருந்த ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். JB தினேஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படமானது 1998, 2000, 2022 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்துள்ள கதாநாயகன், கதாநாயகி ஆகியோரும் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளனர். இதற்காக விஜித், ஷாலி நிவேகாஸ் ஆகிய இருவரும் உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று மாலை 7 மணி அளவில் வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.