Homeசெய்திகள்சினிமாதிகில் நிறைந்த பீட்சா 3 படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

திகில் நிறைந்த பீட்சா 3 படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

-

பீட்சா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் பீட்சா திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
அதைத் தொடர்ந்து அசோக் செல்வனின் நடிப்பில் பீட்சா 2 வில்லா திரைப்படம் வெளியானது.

திகில் நிறைந்த பீட்சா திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார். அஸ்வினுடன் இணைந்து காளி வெங்கட், கௌரவ் நாராயணன், பவித்ரா, குரேஷி, அனுபமா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை திருக்குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய அருண் ராஜ் இசை அமைத்துள்ளார். பீட்சா 3: தி மம்மி இன்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் ஒரு ரெஸ்டாரண்டில் நடக்கும் திகில் சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் இப்படம் கடந்த மே மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது வருகின்ற ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ