spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"தமிழ் சினிமாவின் பெருமை"... பொன்னியின் செல்வனைப் போற்றிய கமல்ஹாசன்!

“தமிழ் சினிமாவின் பெருமை”… பொன்னியின் செல்வனைப் போற்றிய கமல்ஹாசன்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெருமை என்று பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

we-r-hiring

அவர் பேசிய போது,

“என்னுடைய முதல் விருப்பம், ஆசையெல்லாம் சினிமாவைப் பார்க்க வேண்டும். அதை நான் நடித்த படமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் படமாக இருந்தாலும் சரி. அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு சினிமாவாக அமைந்திருக்கிறது பொன்னியின் செல்வன்.

இரண்டு பாகங்களையும்  ஒரு படமா தான் நான் இப்ப பார்க்குறேன். ஏன்னா ரெண்டையும் பார்க்கும்போது இது ஒரு முழு காவியமாக தான் நாம் கொள்ள வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார் மணிரத்னம்.

கருத்து வித்தியாசங்கள், மாற்றுக் கருத்துக்கள் எல்லா படங்களுக்கும் இருக்கும். அது இதில் இருந்திருந்தாலும் கூட மக்கள் இதை பெரிதாக ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். மெத்த மகிழ்ச்சியை எனக்கு அது அளிக்கிறது.

இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமை. தமிழரின் பெருமையும் போற்றும் ஒரு இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்து இருக்கும் முக்கியமான வீரன் திரு மணிரத்னம் அவர்கள். அவர்களை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக தோள்  கொடுத்து வாள் கொடுத்து உதவியவர்கள் அந்த நட்சத்திர பட்டாளம் படை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது போன்று அத்தனை நட்சத்திரங்களும் சந்தோசமாக இணைந்து பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதில் நல்ல ஒரு பொற்காலம் துவங்கி இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதை நீங்களும் அவ்வழியே நடத்திச் செல்ல வேண்டும். ரசிகர்களும் சரி, ஊடகங்களும் சரி. நன்றி வணக்கம் இதன் பங்குபெற்ற அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும். அந்த கடைசி டைட்டில் ஓடுறத பார்த்தேன். எத்தனை ஆயிரம் பேர் அதற்காக பாடுபட்டிருக்கிறார்கள். இது சாதாரணமான விஷயம் அல்ல. போற்றப்பட வேண்டிய ஒரு வெற்றி. வணக்கம்” என்று பேசியுள்ளார்.

MUST READ