spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபொன்னியின் செல்வன் 2-ல் குட்டிக் குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகள் தான்!

பொன்னியின் செல்வன் 2-ல் குட்டிக் குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகள் தான்!

-

- Advertisement -

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் குட்டிக் குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகள் தான்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்திருந்ததை தற்போது இரண்டாம் பாகத்தில் கதையில் உள்ளே படம் சென்றுள்ளது.

we-r-hiring

இரண்டு பாகங்களிலும் குந்தவையாக திரிஷா ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற குட்டி குந்தவை கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தற்போது ஒரு சுவாரசிய தகவலாக குட்டிக் குந்தவையாக ஆக நடித்தது பிரபல சீரியல் நடிகையின் மகள் என்று தெரியவந்துள்ளது.

மலையாள சீரியலில் பிரபலமான கான்யா பாரதி அவளும் பெண்தானே சீரியல் மூலம் தமிழ் சீரியலில் அறிமுகமானார். அஞ்சலி, லட்சுமி, கஸ்தூரி, செல்லமே, மீரா அவள், வள்ளி, தெய்வம் தந்த வீடு, அழகிய தமிழ் மகள் உள்ளிட்ட பல சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது அன்பே வா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய மகள் நிலா தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் சிறு வயது குந்தவையாக நடித்துள்ளார். அம்மாவுக்கு ஏற்ற மகளாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் வென்றுள்ளார்.

MUST READ