பூஜா ஹெக்டே, தெலுங்கு திரை உலகின் பிசியான நடிகையாக வலம் வருபவர். இவர் ஹிந்தியிலும் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறாக பூஜா ஹெக்டேவிற்கு பட வாய்ப்புகள் அதிகம் குவிந்து வருகின்றன. இருந்த போதிலும் இவர் சமீபத்தில் நடித்த ராதே ஷ்யாம், ஆச்சார்யா, கிசி கா பாய் கிசி கி ஜான், உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தமிழில் விஜயுடன் நடித்த பீஸ்ட் திரைப்படமும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பூஜா ஹெக்டே, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் குண்டூர் காரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார்.
இந்தப் படம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினாலும், அதனால் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையாலும் குண்டூர் காரம் படத்திலிருந்து வெளியேறினார். இந்த தகவல் கடந்த இரண்டு நாட்களாக தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.
அதே சமயம் பூஜா ஹெக்டே, பவண் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்தும் பூஜா ஹெக்டே வெளியேறியுள்ளதாக தற்போதைய தகவல்கள் கூறுகிறது. மேலும் இந்த படத்தில் இவருக்கு பதிலாக ராஷ்மிகா நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


