spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹார்ட் பீட் தொடரின் தீம் பாடல் ரிலீஸ்

ஹார்ட் பீட் தொடரின் தீம் பாடல் ரிலீஸ்

-

- Advertisement -
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஹார்ட் பீட் தொடரின் தீம் பாடலை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் திரைப்படங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக வெப் தொடர்களும் உருவாகி வருகின்றன. தொடக்கத்தில் ஆங்கில மொழி மற்றும் இந்தியில் மட்டும் அதிக எண்ணிக்கையில் வெப் தொடர்கள் வெளியாகி வந்தன. ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கத்தை தொடர்ந்து தற்போது தமிழிலும் அடுத்தடுத்து வெப் தொடர்கள் வௌியாகின்றன. அறிமுக இயக்குநர்கள் மட்டுமன்றி முன்னணி இயக்குநர்களும் வெப் தொடர்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

we-r-hiring
அந்த வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொடர் ஹார்ட் பீட். பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் திரைக்கதை எழுதி உள்ளார். மேட்லி பூஸ் இந்த தொடருக்கு இசை அமைத்திருக்கிறார். நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கமர்ஷியல் கதையாக இளைஞர்கள் கொண்டாடும் விதமாக இந்த தொடர் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை அனுமோல், தீபா பாலு, யோக லட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரித்து உள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள, ஹார்ட் பீட் பாட்டு எனும் தீம் பாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ