- Advertisement -
காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் போர் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இரண்டு இளம் நடிகர்கள் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம். தமிழில் அர்ஜூன் தாஸின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமாகி, அடுத்தடுத்து பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
