spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசலார் உருவான விதம்... அதிரடி, ஆக்‌ஷன் நிறைந்த வீடியோ வெளியீடு...

சலார் உருவான விதம்… அதிரடி, ஆக்‌ஷன் நிறைந்த வீடியோ வெளியீடு…

-

- Advertisement -
சலார் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், மேக்கிங் காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் பிரசாந்த் நீல் மற்றும் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம், மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. கேஜிஎஃப் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதில், இரண்டாம் பாகம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் சலார்.

we-r-hiring
ஹம்போலா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் இத்திரைப்படத்தில், பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும், ஜெகபதிபாபு, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இத்திரைப்படம் கடந்த 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

கலவையான விமர்சனங்களை சலார் திரைப்படம் பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக படம் பணத்தை குவித்து வருகிறது. வெளியான அனைத்து இடங்களிலும் கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், சலார் திரைப்படத்தின் மேக்கிங் காணொலியை படக்குழு பகிர்ந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ