பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை கே ஜி எஃப் 1 மற்றும் கேஜிஎப் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தை கே ஜி எஃப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கேஜிஎப் படத்தை போலவே இந்த படமும் ஆக்சன் நிறைந்த படமாக உருவாகி வருகிறது.
பிரபாஸின் சமீபத்திய திரைப்படங்கள் பெரிதளவு வெற்றி பெறாத காரணத்தால் சலார் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பிரித்திவிராஜ் இதில் வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.சலார் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஜூலை 6ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஏன் இந்த டீசரை அதிகாலையில் வெளியிடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் தற்போது அதன் காரணம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது கே ஜி எஃப் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ராக்கி கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும்போது அவருக்கு அருகில் இருந்த கடிகாரத்தில் அதிகாலை 5 மணி என் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் கே ஜி எஃப் படத்திற்கும் சலார் படத்திற்கும் தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
மேலும் இந்த டீசரில் மிரட்டலான ஆக்சன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அதோடு PART 1 CEASEFIRE என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அது மட்டும் இல்லாமல் இது ஒரு படமாக இல்லாமல் சீரிஸாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த செய்திகள் ரசிகர்களுக்கிடையேயான எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது.